அமைச்சருக்கு பாராட்டு

ராஜபாளையம்: ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா நடந்தது.

சங்கத் தலைவர் பி.ஆர். வெங்கட்ராமராஜா தலைமை வகித்தார். செயலாளர் வெங்கடேஸ்வர ராஜா விருந்தினரை அறிமுகம் செய்தார். நிர்வாகிகள் உறுப்பினர்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதில் முன்னாள் சென்னை மாகான முதல்வரும், முன்னாள் ஒடிஷா மாநில கவர்னரான பி.எஸ்.குமாரசாமி ராஜா உருவப்படத்தை சட்டசபையில் திறக்க வேண்டும். முடங்கியுள்ள ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை தொடங்க வேண்டும். நகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள வரிகளை குறைக்க வேண்டும். ராஜபாளையம் மாஸ்டர் பிளான் – 2041 திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வழங்கப்பட்டது. சங்கச் செயலாளர் நாராயணசாமி நன்றி கூறுனார்.

Advertisement