உச்சிப்புளியில் ரோட்டோரம் ஆக்கிரமிப்புகள் அதிகம்: போலீசார் அலட்சியம்
உச்சிப்புளி: மண்டபம் செல்லும் வழியில் உள்ள உச்சிப்புளி நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை என்.எச் 87 அமைந்துள்ளது.இந்நிலையில் உச்சிப்புளி நகரின் இருபுறங்களிலும் ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனால் அடிக்கடி அப்பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
இரண்டு ரோடுகளை பிரிக்கக்கூடிய சென்டர் மீடியன் அருகே வலது மற்றும் இடது பகுதிகளில் ரோட்டோர பழக்கடைகள், ஜூஸ் கடைகள் மற்றும் ஆக்கிரமிப்பு கடைகள் இடையூறாகவே உள்ளன. பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் மற்றும் அரசு பஸ்கள் உச்சிப்புளி வழியாக ராமேஸ்வரம் செல்லும் நிலையில் ரோட்டின் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளால் விபத்து ஏற்படுகிறது.
எனவே உச்சிப்புளி போலீசார், வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும்
-
திண்டுக்கல், தேனி மாவட்ட இணைப்பு ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் சிரமம்
-
ராமநாதபுரம் மாவட்டம் நிகழ்ச்சி
-
வடிகால் கான்கிரீட் மூடி சேதம்: விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
-
இலங்கை சிறையில் வன்முறை; 25 பேர் உயிரிழப்பு
-
அடுத்த 3 மாதங்களில் மொபைல் 'ரீசார்ஜ்' கட்டணங்கள் உயர வாய்ப்பு
-
குடகனாற்றில் சீமை கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்