அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புடின் மீண்டும் பேச்சு

3

மாஸ்கோ: அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புடினும் தொலைபேசியில் சுமார் ஒன்றரை மணிநேரம் பேசியுள்ளனர். அப்போது, உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர உதவுவதாக அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் நாளை தொடங்கவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த சூழலில் இரு தலைவர்களும் தொலைபேசியில் பேசியுள்ளனர். அப்போது, அமெரிக்காவின் 250 சுதந்திர தினத்தையொட்டி, அதிபர் டிரம்புக்கும், அந்நாட்டு மக்களுக்கும் ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.

சுமார் 90 நிமிடம் நடைபெற்ற இருவரின் உரையாடல் குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில்; இருநாட்டு தலைவர்களின் இந்த உரையாடல் வர்த்தக ரீதியாகவும், மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருந்தது.

உக்ரைனுடனான போரை விரைவாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவுவதாக அதிபர் டிரம்ப் கூறினார், இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்தாண்டில் மட்டும் அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புடினும் 4வது முறையாக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement