கனமழையால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு: மும்பைக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்
மும்பை: மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புனே-மும்பை நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பை, தானே, ராய்கட், பால்கர் மாவட்டங்களில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொட்டிய கனமழையால் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறின. பஸ் போக்குவரத்து மட்டுமின்றி, புறநகர் ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மும்பை, தானே, பால்கர் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. மும்பை பல்கலைக்கழகம் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது, புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
மிகவும் பரபரப்பான ரயில் பாதைகளில் ஒன்றான கர்ஜத்-லோனாவாலா போர் காட் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளைத் தொடர்ந்து, மும்பை-புனே ரயில் வழித்தடத்தில் இன்று அதிகாலையில் ரயில் சேவைகள் ஸ்தம்பித்தன.
இது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: மும்பை-புனே மலைப்பாதைப் பகுதியில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு மற்றும் ரயில் தண்டவாளங்களில் பாறைகள் விழுந்தது தொடர்பான சூழல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து ரயில் சேவைகளையும் விரைவாகச் சீரமைப்பதை உறுதிசெய்ய, அதிகாரிகளை ஒரே அணியாக இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
@block_P@
மும்பை, பால்கர், ராய்கட் மற்றும் தானே ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக கனமழைக்கான ரெட் அலெர்ட் இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.block_P
@block_G@
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி விக்ரம் சிங் கூறியதாவது: மும்பையின் பல பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழையும், சில இடங்களில் அதிக கனமழையும் பெய்துள்ளது. குறிப்பாக புனே மாவட்டத்தின் ராய்கட் மற்றும் பால்கர் ஆகிய இடங்களிலும் அதிக கனமழை பதிவாகியுள்ளது. இன்று லோனாவாலாவில் அதிகபட்சமாக 670 மி.மீ மழை பெய்துள்ளது. அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்கு ராய்கட், புனே மாவட்டத்தின் மலைத்தொடர் பகுதிகள், நாசிக் மற்றும் பால்கர் ஆகிய இடங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிக கன மழை பெய்யும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.block_G
@block_B@
கனமழையால் தாழ்வான மற்றும் நகர்ப்புறப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும். சில பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும். மேலும் சாலைகள் மற்றும் பாலங்களின் மீது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடக்கூடும். பலவீனமான மரங்கள் வேரோடு சாயக்கூடும். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் நிலச்சரிவுகள், மண் சரிவுகள் மற்றும் பாறை சரிவுகள் ஏற்படக்கூடும். மக்கள் அனைவரும் தேவையற்ற பயணங்களை தவிர்த்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.block_B
@block_Y@
கனமழை காரணமாக 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒன்பது ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. ரத்து செய்யப்பட்ட ரயில்களில் சிஎஸ்எம்டி-புனே இந்திராயணி எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், டெக்கான் எக்ஸ்பிரஸ், டெக்கான் குயின், பிரகதி எக்ஸ்பிரஸ் மற்றும் துலே எக்ஸ்பிரஸ் ஆகியவை அடங்கும். புனே-சிஎஸ்எம்டி சிங்காட் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட கூடுதல் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. block_Y
@block_G@
புனே மாவட்டத்தில், கோராவடி ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தனியார் பஸ் ஒன்று சிக்கிக்கொண்டது. அதற்குள் இருந்த பயணிகள் 37 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.block_G
@block_G@block_G
மாநகராட்சி நடவடிக்கை எடுத்து மக்கள் பாதிப்பு ஏற்படாதவரை தடுக்க வேண்டும்மேலும்
-
சுவாமி அபிஷேகத்துக்கு தீர்த்தம் மணிமுக்தாற்றில் உறைகிணறு
-
தாங்க முடியல... மது, கஞ்சா போதை ஆசாமிகள் அட்டகாசம்
-
மண்ணில்லா விவசாயம்: விவசாயிகளுக்கு பயிற்சி
-
விடுதிகளில் நடக்கும் குறைபாடுகள்: தகவல் தெரிவிக்க 'வாட்ஸ் ஆப்' எண்
-
மானாமதுரையில் வீடுகளில் தொடர் திருட்டு: குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
-
தேனி மாவட்டம் நிகழ்ச்சி