தவெக கூட்டணி அமைந்தால் விசிக இடம்பெறும்; திருமா அறிவிப்பு
சென்னை: தவெக கூட்டணி அமைந்தால் விசிக இடம்பெறும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
விசிக சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழவில் அவர் பேசியதாவது; எனக்கென்று ஒரு அரசியல் நேர்மை இருக்கிறது. வெறும் பதவிக்காக, பொருளுக்காக, புகழுக்காக நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக் கொள்பவன் நான் இல்லை என்பதை அவ்வப்போது உறுதிப்படுத்தியுள்ளேன். யார் இதைப்பற்றி பேசினார்கள்.
பேரம் பேசினேன் பணியவில்லை என்றும், வாய்ப்பு நிறைவேறவில்லை, அதனால் இன்று தவெகவுக்கு ஆதரவு என்று பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு விசிக எந்தவகையில் துரோகம் விளைவித்தது என்பதை யாரால் சொல்ல முடியுமா? ஆதாரம் காட்ட முடியுமா? வெளிப்படையாக விவாதிக்க முடியுமா?
தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கடைசி நொடி வரையில், திமுக தலைமைக்கு தகவல் கொடுத்தேன். இப்படித்தான் முடிவெடுக்கப் போகிறோம், இப்படித்தான் நிலைப்பாடு எடுக்கப் போகிறோம், இதுதான் காரணம் என்பதை வெளிப்படையாக பேசினோமா, இல்லையா? ஒப்புதல் பெற்றோமா, இல்லையா? உங்கள் தோழமையை பாராட்டினோமா, இல்லையா? நட்புறவை சிதைக்கக் கூடாது என்று இருந்தோமா இல்லையா?
தவெக கூட்டணியில் சேருவோம் என்று முடிவெடுத்தால், நீங்க அமைச்சரானால் தான் தமிழகத்தில் எழுச்சி உருவாகும். அதற்கு நீங்கள் உடன்பட வேண்டும் என்று கட்சியினர் ஆலோசனை கொடுத்தார்கள். ஆனால், அதற்கும் நான் உடன்படவில்லை. என்னைப் பற்றிய தனிப்பட்ட முடிவை எடுக்க அதிகாரமும், சுதந்திரமும் இருக்கிறது. 10 நாட்களுக்குப் பிறகு தான் தவெகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை அறிவித்தோம்.
என்றும் நட்புக்கும், தோழமைக்கும் உறுதுணையாக இருப்போம். 5 ஆண்டுகள் வரை உங்கள் ஆட்சி தொடரும். நாங்கள் துணையிருப்போம் என்று சொன்னோம். இதில் என்ன துரோகம் இருக்கிறது.
திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இல்லை என்று திமுக தலைமையே அறிவித்து விட்டது. இதுவரையில் நான் அறிவிக்கவில்லை. தவெக கூட்டணியில் இருக்கிறோமா? என்று நான் அறிவிக்கவில்லை. அமைச்சரவையில் இருக்கிறோம். கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 1ம் தேதி நடந்தது, அதில் பங்கேற்றோம். இன்னும் அங்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அப்படியொரு கூட்டணி அமைந்தால் இடம்பெறுவோம். அதில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை.
இதை ஏன் இப்போது நான் சொல்கிறேன் என்றால், திமுகவின் தலைவர்களே ஒன்று கூடி, விசிக நிர்வாகியை அழைத்து திமுகவில் இணைத்துக் கொள்கிறார்கள். அப்படியென்றால், விசிகவுடன் எங்களுக்கு உறவில்லை என்று திமுகவே சொல்கிறது. நானா சொன்னேன். விசிகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தது ஸ்டாலின் தான். அவர் மீதான மதிப்பும் என்றும் குறையாது. பாஜவில் இருக்கும் தலைவர்களுக்கே மரியாதை கொடுப்பவர் திருமாவளவன், இவ்வாறு அவர் கூறினார்.
த வெ க அரசியில் மந்திரி பதவியை வாங்கிட்டு கூட்டணியில் இருக்கிறோம் என்று கூற என்ன தயக்கம் திருமாவளவன் அவர்களே?
நம்பிக்கை துரோகி களிடம் ஞாயம் எதிர்பார்க்க முடியாது. இன்று தவெக நாளை வெறு ஒரு கட்சி.
நீங்க எல்லாம்..." Deputy CM" என்று நினைத்துப்பார்க்கவே ...கூடாது ....
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பிஜேபி வந்துவிடும் இப்படி எல்லாம் பேசிப் பேசியே மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.
இவரு அமைச்சரானால்தான் தமிழகத்தில் எழுச்சி உண்டாகும் என்று விசிகவினர்
சொன்னார்களாம்! திருமாவளவனின் ஆழ் மனதில் உள்ள பேராசை அவரது பேச்சின் மூலம் வெளிப்பட்டு விட்டது.
ஆசை இருக்கு தாசில் பண்ண அதிஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க....
புலிக்கு பசித்தாலும் புல்லை திங்காது. எந்த கட்சியில் வேணாலும் கூட்டணி வச்சிக்க எனக்கு தனியுரிமை உண்டு. இதுக்கு எதுவும் ஆதாரம் வேணுமா? எனக்கு து.மு பதவிதான் வேணும் என்று நான் சொல்லியிருக்கிறேனா? அதுக்கு எல்லா தகுதியும் எனக்கு இருக்கு. 35 வருஷத்துக்கு மேலாக அரசியல் பண்றேன்.வேறென்ன ஆதாரம் வேணும்? பாஜக தலைவர்களையும் மதிப்பவன் நான். அதனால் அவர்களுடனும் கூட்டணி அமைக்க எனக்கு தனியுரிமை உண்டு. என்னுடைய தனியுரிமை பற்றி யாரும் கேள்வி கேட்க முடியாது. இதுதான் என்னுடைய அரசியல் நிலைப்பாடு. நான் சுயலக்காரன் என்று என் காது பட பேசுகிறார்கள். அதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. சுயநலக்காரன் என்று பேசுபவர்கள் எனக்கு து மு பதவி தருவார்களா?
திமுக உறுப்பினர் அடடையை புடுங்கி கிழித்து போட்டுவிடுவார்கள் பரவாயில்லையா ?
இந்தமாதிரி ஜாதி கட்சிகளை எந்த கட்சியும் கூட்டணியில் சேர்க்கக்கூடாது திமுக இவர்களை சேர்த்தது 2 MLA க்கள் கிடைத்ததும் ஆளும் கட்சிக்கு ஓடிவிட்டனர் இவர்களுக்கு கொள்கை ஏதும் கிடையாது பதவியை அனுபவிக்கனும் செய்யும் சட்ட விரோத செயல்களை ஆளும் கட்சி கண்டு கொள்ளக்கூடாது. அவ்வளவுதான். தேர்தல் நேரத்தில் விஜயை இவர் என்னமாதிரி கிழி கிழின்னு கிழித்தார். மக்கள் விஜய் பக்கம் என்று தெரிந்தவுடன் தனக்கு வாய்ப்பளித்து வெற்றி கொடுத்த திமுகவை விட்டுவிட்டு விஜய் பக்கம் ஓடிவிட்டார். இவரின் நோக்கம் எல்லாம் பதவி அதிகாரம் மட்டுமே.
இந்த முறை பிளாஸ்டிக் சேர் உண்டா இல்லையா? கட்டாந்தரையே போதும் என்று முடிவு எடுத்து விடாமல் இருந்தால் சரி.
வேறு வழியே இல்லை. இது ஊர் அறிந்த உண்மை. ஏமாந்தவர் திரு விஜய் தான். அடுத்தவன் முதிகில் ஏறி சுலபமா சாபாரி செய்து, மந்திரி பதவிகள் வாங்கலாம். தி.திருமா சரியான எமாகலத்தான்.மேலும்
-
சுவாமி அபிஷேகத்துக்கு தீர்த்தம் மணிமுக்தாற்றில் உறைகிணறு
-
தாங்க முடியல... மது, கஞ்சா போதை ஆசாமிகள் அட்டகாசம்
-
மண்ணில்லா விவசாயம்: விவசாயிகளுக்கு பயிற்சி
-
விடுதிகளில் நடக்கும் குறைபாடுகள்: தகவல் தெரிவிக்க 'வாட்ஸ் ஆப்' எண்
-
மானாமதுரையில் வீடுகளில் தொடர் திருட்டு: குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
-
தேனி மாவட்டம் நிகழ்ச்சி