வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 சரிவு

3


சென்னை: சென்னையில் வார தொடக்க நாளான இன்று (ஜூலை 06) 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 480 ரூபாய்க்கும், கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து 13,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில்
கடந்த சனிக்கிழமை 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 13,700 ரூபாய்க்கும், சவரன் 1,09,600 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2.60 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையானது.

நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (ஜூலை 06) 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 480 ரூபாய்க்கும், கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து 13,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


வெள்ளியும் சரிவு



வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 250 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Advertisement