தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்; சியாமா பிரசாத் முகர்ஜிக்கு பிரதமர் மோடி புகழாரம்

3



நமது நிருபர்




டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்தநாளான இன்று (ஜூலை 06) அவருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். வளர்ச்சியடைந்த இந்தியா நோக்கிய நமது பயணத்தில், அவரது தொலைநோக்கு பார்வை ஒளிர செய்கிறது என மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்தநாளான இன்று, அவருக்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆழ்ந்த புலமை, துணிச்சல் மற்றும் தேச சேவையில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவையே அவரது வாழ்வின் அடையாளங்களாகத் திகழ்ந்தன. இந்தியாவின் ஒற்றுமை, கண்ணியம் மற்றும் முன்னேற்றத்திற்காக அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார்.

முகர்ஜியின் பங்களிப்புகள் பல்வேறு துறைகளில் பரவியிருந்தன. புதுமை மற்றும் எதிர்கால நோக்குடைய கல்வியை ஆதரித்த அவர், ஒரு சிறந்த சிந்தனையாளராகவும் கல்வியாளராகவும் விளங்கினார். தொழில் துறை அமைச்சராக, தொழில் துறையில் தன்னிறைவுக்கான அடித்தளத்தையும் அவர் அமைத்தார். மேற்குவங்கத்தில் பஞ்சத்தின்போது அவர் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கைகள், துயருற்ற மக்கள் மீதான அவரது ஆழ்ந்த கருணையை வெளிப்படுத்தின.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீதான அவரது உறுதியான அர்ப்பணிப்பு ஒரு உத்வேகமாகத் திகழ்கிறது. வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில், அவரது தொலைநோக்குப் பார்வை தொடர்ந்து நமது பாதையை ஒளிரச் செய்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement