இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் வம்புக்கு இழுத்த அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை பங்கேற்க உள்ள நிலையில், இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் அவர் வம்புக்கு இழுத்துள்ளார்.
கடந்த மாதம் பிரான்சில் நடந்த ஜி7 மாநாட்டின் போது பிரதமர் மெலோனி, தன்னிடம் செல்பி எடுப்பதற்காக மீண்டும் மீண்டும் கெஞ்சியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்த மெலோனி, நானோ அல்லது இத்தாலி நாடோ யாரிடமும் ஒருபோதும் கெஞ்சியதில்லை, இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட கதை, என்று கடுமையாக சாடினார்.
இந்தத் தூதரகக் கசப்புணர்வு காரணமாக, சமீபத்தில் இத்தாலி வெளியுறவு அமைச்சர் தனது திட்டமிடப்பட்ட அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்திருந்தார்.
இந்த நிலையில், துருக்கியில் நாளை நேட்டோ உச்சிமாநாடு நடைபெற இருக்கிறது. இதில், பங்கேற்க இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் சந்திக்க இருக்கிறார். இந்த சூழலில், அவர் மீண்டும் இத்தாலி பிரதமர் மெலோனியை சீண்டியுள்ளார்.
அதிபர் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில், இத்தாலி பிரதமர் மெலோனி தன்னை பார்ப்பது போன்ற பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து, 'தடை உத்தரவு தேவை,' என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். இது இருவரிடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த பிளேபாய் டிரம்ப் மெலோனியிடம் எதையோ எதிர்பார்க்கிறார். மெலோனி அதனை நிராகரிக்கிறார். ஆகையால்தான் பிளேபாய் டிரம்ப் மீண்டும் மீண்டும் மெலோனியை வம்புக்கு இழுக்கிறார்.மேலும்
-
சுவாமி அபிஷேகத்துக்கு தீர்த்தம் மணிமுக்தாற்றில் உறைகிணறு
-
தாங்க முடியல... மது, கஞ்சா போதை ஆசாமிகள் அட்டகாசம்
-
மண்ணில்லா விவசாயம்: விவசாயிகளுக்கு பயிற்சி
-
விடுதிகளில் நடக்கும் குறைபாடுகள்: தகவல் தெரிவிக்க 'வாட்ஸ் ஆப்' எண்
-
மானாமதுரையில் வீடுகளில் தொடர் திருட்டு: குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
-
தேனி மாவட்டம் நிகழ்ச்சி