சிறுமி பாலியல் பலாத்காரம்; முதியவருக்கு '42 ஆண்டு'

1

கோழிக்கோடு: கேரளாவின் கோழிக் கோடில் சிறுமியை பலாத்கா ரம் செய்த முதியவருக்கு 42 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தின் பெருவண்ணமுழி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன், 56.

மத்திய அரசு ஊழியரான இவர் கடந்த 2024 ஜனவரியில் பேரக்குழந்தைகளுடன் வீட்டில் விளையாடிய 8 வயது சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மூன்றாம் வகுப்பு மாணவியான அந்த சிறுமி இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அளித்த புகாரின்படி பெருவண்ணமுழி போலீசார் சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு, நடாபுரம் விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மேனன் முன்னிலையில் நடந்தது.

இதில் குற்றவாளி சந்திரனுக்கு 42 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப் பட்டது.

Advertisement