பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அரசு கலைப்பு

காசா: போருக்குப் பிந்தைய மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில், காசாவில் தங்கள் அரசை கலைப்பதாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்து உள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே, 2023ல் போர் நடந்தது. அமெரிக்காவின் தலையீட்டில், போர் நிறுத்தம் கடந்தாண்டு அமலுக்கு வந்தது.

போர் நிறுத்த ஒப்பந் தத்தின்படி, காசா பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அமைதி வாரியம் உருவாக்கப்பட்டது. ஐ.நா., சபையின் ஆதரவு பெற்ற ஒரு தொழில்நுட்பக் குழு காசாவை நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

இதை நடைமுறைபடுத்தும் வகையில், காசாவின் நிர்வாக அரசைக் கலைக்க முன்வருவதாக ஹமாஸ் அமைப்பு நேற்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ஹமாஸ் அரசின் ஊடக அலுவலகத் தலைவர் இஸ்மாயில் அல் தவாப்தா வெளியிட்டார்.

ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, ஆயுதங்களை கைவிடுவது, கூட்டு ராணுவ அமைப்பின் பாதுகாப்பை ஏற்பது உள்ளிட்டவை குறித்து ஹமாஸ் தரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

மேலும், ஹமாஸ் அமைப்பின் கீழ்நிலை அதிகாரி இந்த அறி விப்பை வெளியிட்டுள்ளார். அதனால், இது முறையாக செயல்பாட்டுக்கு வருமா என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.

Advertisement