கட்டாய மத மாற்ற புகார்: ஐ.டி., பெண் ஊழியருக்கு ஜாமின்
நாசிக்: மஹாராஷ்டிராவில், தனியார் ஐ.டி., நிறுவனம் ஒன்றில் ஊழியர்களை கட்டாய மத மாற்றம் செய்த புகாரில் கைதான அந்நிறுவனத்தின் பெண் ஊழியருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில், பிரபல தனியார் ஐ.டி., நிறுவனத்தின் கிளை செயல்படுகிறது. இங்கு பணியாற்றிய ஊழியர்கள் முஸ்லிம் மதத்துக்கு கட்டாயமாக மாற்றப்பட்டதாகவும், அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் சில மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது.
பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த நாசிக் போலீசார், அந்நிறுவனத்தைச் சேர்ந்த எட்டுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக இருந்த அந்நிறுவனத்தின் மனித வளத்துறை மேலாளர் நிடா கான் என்பவரை, இரு மாதங்களுக்கு பின் கைது செய்தனர். கைதானவர்கள் பணியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஜாமின் கோரி நாசிக் நீதிமன்றத்தில் நிடா கான் மனு தாக்கல் செய்தார். இது, கூடுதல் அமர்வு நீதிபதி கே.ஜி.ஜோஷி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
நிடா கான் கர்ப்பமாக இருப்பதால் ஜாமின் வழங்கும்படி அவரது வழக்கறிஞர் கோரினார். இதை ஏற்று, அவருக்கு நீதிபதி கே.ஜி.ஜோஷி ஜாமின் வழங்கினார். அதே சமயம், இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டேனிஷ் ஷேக் என்பவரின் ஜாமின் மனு நிராகரிக்கப் பட்டது.
எப்படிக் கிடைத்தது ஜாமீன் ?? இஸ்லாம் மதமாற்றத்தை ஊக்குவிப்பதில்லை .... என் வழி எனக்கு, உன் வழி உனக்கு என்பதே எமது கோட்பாடு ..... இதே போல ஜாஃபர் சாதிக் சுமார் ஒரு வருடமாக ஜாமீனில் இருக்கிறார் ....
கர்பமாக இருந்தால் ஜாமீன் கொடுக்கவேண்டும் என்கிற சட்டத்தை மாற்றி, சிறையிலேயே பிரசவம் பார்த்துக்கொள் என்று கறாராக தீர்ப்பு கொடுக்கவேண்டும்.
இந்த உலகில் மகத்தானது தாய்மை. இனியாவது இவர் தவறு செய்யாமல். இருக்கட்டும்.
நீதி துறை மிக கேவலமாக இருப்பதால் தான் குற்றங்கள் பெருகுகிறது
Indian laws are flawed.
தவறு நடக்க உறுதுணையாக இருந்த இந்த மதமாற்ற கூட்ட தலைவியை எக்காரணம் கொண்டு இருக்கக் கூடாது
அதேபோல் மதம் மாற்றியவர்களை இடை நீக்கம் செய்ததும் தவறு டிஸ்மிஸ் செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
இதுதான் நம் பிரச்சினை. நீதிபதிகளும் உடனே ஜாமீன் கொடுத்து விடுகிறார்கள். இதை குற்றம் செய்யும் போது தெரியவில்லையா
இவர் சர்வதேச தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தார் என்பதை ஏன் கணக்கில் கொள்ளவில்லை.
எந்தத் தவறு செய்தாலும் ஜாமீன் கிடைக்கும் அல்லது தப்பிவிடலாம் எனும் நிலை இருக்கும் வரை தைர்யமாக தொடர்ந்து தவறு செய்வார்கள்.
ஜாமின் வழங்க, பாதிக்க பட்ட பெண், போலீஸ், அரசு வக்கீல் கருத்து அவசியம். நிறுவன நற்பெயர் கெட்டு விட்டதால் அவர்கள் கருத்தும் தேவை. இதன் அடிப்படையில் நீதிபதி ஜாமீனை முடிவு செய்ய வேண்டும். பெண் கர்ப்பம். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட நபர். ஜமீனுக்கு பதில் சிறையில் போதிய வசதி கொடுக்க சொல்ல வேண்டும். நீதிமன்றம் ஜாமின் வழங்க கவர்னர் அனுமதியை சட்ட திருத்தம் மூலம் கட்டாயம் ஆக்க வேண்டும். ஜாமீன் ஒரு கருணை மனு போன்றது.மேலும்
-
'எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய அரசு தயார்!: மழை நிலவரம், விவசாய பணிகள் கண்காணிப்பு
-
18 பெண்களின் உயிரை பலி வாங்கிய இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு 'சீல்'
-
அயோத்தி கோவில் காணிக்கை முறைகேடு காங்கிரஸ் நுாதன போராட்டம்
-
முதல்வரின் தனி செயலாளருக்கு வாழ்த்து
-
இடிந்து விழும் நிலையில் புராதன கோவில் புனரமைக்க இழுத்தடிக்கும் அறநிலையத்துறை
-
நீர்த்தேக்க தொட்டி 'பம்ப் ஆப்பரேட்டர்' பணியிடம்... 1,800 காலி: குடிநீர் வினியோகம், பராமரிப்பு பணிகள் பாதிப்பு