இந்தோனேஷியாவில் பிரதமர் மோடி; விமான நிலையம் வந்து வரவேற்றார் அதிபர்
ஜகார்த்தா: இந்தோனேஷியா சென்ற பிரதமர் மோடியை, ஜகார்த்தா விமான நிலையத்தில் அந்நாட்டு அதிபர் பிரபோவ் சுபியான்டோ வரவேற்றார்.
இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி இன்று முதல் ஜூலை 11ம் தேதி வரை பயணம் மேற்கொண்டு உள்ளார். முதற்கட்டமாக இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தா சென்றடைந்தார். விமான நிலையம் வந்த அந்நாட்டு அதிபர் பிரபோவ்சுபியான்டோ, பிரதமர் மோடியை வரவேற்றார். தொடர்ந்து அவருக்கு அரசு முறைப்படியான வரவேற்பும் அளிக்கப்பட்டது. அந்நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். அவர்களை அதிபர் பிரபோவ் சுபியான்டோ, பிரதமரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.





பிரபோவ் சுபியான்டோவும் நானும், யோக்யகார்த்தாவில் உள்ள பிரம்பனன் கோவிலுக்கு செல்ல உள்ளோம். இது நமது இரு நாடுகளுக்கு இடையிலான நெருங்கிய கலாசார தொடர்புகளை உறுதி செய்யும். இந்தோனேஷியாவில் இந்திய வம்சாவளியினர் உடன் கலந்துரையாடுவதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அந்த பதவில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியப் பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து அவர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கும் செல்ல உள்ளார்.
@block_B@
பிரதமர் மோடி தங்க உள்ள ஓட்டல் வளாகத்தில் இந்திய வம்சாவளியினர் ஒன்று கூடினர். பாரம்பரிய முறைப்படி கலை மற்றும் இசை நிகழ்ச்சி நடத்தி பிரதமரை வரவேற்ற இந்தியர்கள், '' பாரத் மாதா கி ஜெய்'' மற்றும் '' மோடி'' என உற்சாகமாக கோஷம் போட்டனர்.block_B
@block_Y@
பிரதமர் மோடியின் விமானம், இந்தோனேஷியா வான் எல்லைக்குள் வந்தது. உடனடியாக அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான சுகோய்3 மற்றும் எப் 16 போர் விமானங்கள் மோடியின் விமானத்துடன் வந்து, சிறப்பித்தது.
இதில் எப் 16 போர் விமானங்கள் என்பது அமெரிக்க தயாரிப்பு. ஒரு இன்ஜின் கொண்ட இந்த விமானம், பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. சுகோய் 30 போர் விமானம் இரு இருக்கைகளுடன் இரண்டு இன்ஜின் உடன் இயங்கும் ரஷ்ய தயாரிப்பு ஆகும். இந்தியாவிடமும் சுகோய் 30 எம்கேஐ ரக போர் விமானங்கள் உள்ளன.block_Y
தினமலர் நேரலை
பிரதமர் மோடி ஜகார்த்தா சென்றடைந்தது குறித்த செய்தி தினமலர் இணையதளம் மற்றும் சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனைக் காண: https://www.youtube.com/watch?v=49itwV2VUz8
பாக்கிஸ்தான் சென்றாலும், அங்குள்ள எதிரிகள் கூட மோடிஜியை மிகவும் மரியாதையுடன் நடத்துவார்கள். அந்த அளவுக்கு மோடிஜி ஒரு நல்ல மனிதர், சிறந்த தலைவர்.
உலகில் இஸ்லாமியர் மிக அதிகம் வசிக்கும் நாடு இந்தோனேசியா. இந்து மதத்தை, இந்துக்களை பெரிதும் மதிப்பவர்கள் அவர்கள்.1998 - 99 ல் இந்தோனேசியப் பொருளாதாரம் மிகவும் வீழ்ந்த போது அவர்களது மதிப்பு கூட்டிய கரன்சியில் விநாயகர் படத்தை அச்சிட்டு வெளியிட்டவர்கள் இந்தோனேசியர்கள்.
பிரதமர் வந்தால் ஸ்டாலின் ஓடி ஒழிந்து கொள்வார்
சிறப்பு, மிகச்சிறப்பு, நம் நாட்டிற்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. பெருமைப்படாத அவதூறு பேசும் அவல கோஷ்டிகளைக் கண்டுகொள்ள வேண்டாம், பாவம் அவர்களையே யாரும் கண்டுகொள்வதில்லை. கெடுவான், கேடு நினைப்பான்.
அயல் நாட்டு அதிபர்கள் விமான நிலையத்திற்க்கே வந்து, நமது பிரதமர் மோடிஜி அவர்களை சிவப்பு கம்பளம் விரித்து, வருக வருக என வரவேற்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அவருக்கு உரிய மரியாதை அளிக்க தவறி விட்டோம். இதனை பதிவு செய்யும் நேரத்திலேயே என் கண்களில் கண்ணீர் வடிகிறது.மேலும்
-
மஹாராஷ்டிராவில் கொட்டி தீர்த்தது கனமழை: அடுத்தடுத்து நிலச்சரிவு; பஸ், ரயில் சேவை பாதிப்பு
-
பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அரசு கலைப்பு
-
அயோத்தி ராமர் கோவில் நிர்வாகிகளின் ராஜினாமா ஏற்பு! விசாரணை அறிக்கையை ஆய்வு செய்ய முடிவு
-
கட்டாய மத மாற்ற புகார்: ஐ.டி., பெண் ஊழியருக்கு ஜாமின்
-
இந்தோனேஷியா நாட்டில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
-
சிறுமி பாலியல் பலாத்காரம்; முதியவருக்கு '42 ஆண்டு'