கூடலுாரில் தொடர் மழை: சாலையோரம் மண் சரிவு

கூடலுார்: கூடலுாரில் தொடரும் மழையால் சாலையோரங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

கூடலுார் பகுதியில் ஜூலை 5 இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது. அதில், கோழிக்கோடு சாலை, நந்தட்டி அருகே நேற்று மரத்தின் கிளை சாலையில் விழுந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையோரங்களில் மண்சரிவு ஏற்பட்டது. தீயணைப்பு துறை, நெடுஞ்சாலை துறையினர் மரக்கிளைகளை அகற்றினர். போலீசார் போக்குவரத்து சீரமைத்தனர்.

விவசாயிகள் கூறுகையில், 'கடந்த மாதம் எதிர்பார்த்த பருவ மழை பெய்யாததால், நெல் விவசாயத்தை துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, பெய்து வரும் மழையினால், நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்தால், நெல் விவசாயத்திற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும்,' என்றனர்.

Advertisement