2,000 புதிய 'ஏசி' பஸ்கள் தமிழக அரசு வாங்க முடிவு
சென்னை: தமிழகத்தில், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில், 2,000 புதிய 'ஏசி' பஸ்கள் வாங்கி இயக்க, அரசு போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களில், தினமும் 20,000 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 5,000க்கும் மேற்பட்ட பஸ்கள், பழமையாக உள்ளன. எனவே, பழைய பஸ்களை படிப்படியாக நீக்கி, புதிய பஸ்களை வாங்கி இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் விஜய், போக்குவரத்து துறை அதிகாரிகளுடன், கடந்த மாதம் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், புதிதாக 'ஏசி' பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
அரசு போக்குவரத்துக் கழகங்களில் செயல்படுத்தப்படும், மகளிர் இலவச பயண திட்டத்தை, அனைத்து பஸ்களுக்கும் விரிவுப்படுத்த, செயல் திட்டப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, 2,000 புதிய 'ஏசி' பஸ்கள் வாங்கப்பட உள்ளன. இதற்கான, டெண்டர் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏசி பஸ் எல்லாம் வாங்குறது இருக்கட்டும் முதல்ல ஒழுங்கா பராமரி யுங்க இப்போ உள்ளேயே நிறைய தீய கட்சி கேடிங்க இருக்கானுங்க ஸ்பேர் பார்ட்ஸ் திருடுவானுங்க ஸ்பேர் பார்ட்ஸ் திருடி வெளியில வித்துருவானுங்க ஸ்பேர் பார்ட்ஸ் கையிருப்பு எல்லாம் ஒழுங்கா மெயின்டெயின் பண்ணுங்க அதே மாதிரி பெயிண்ட் அடிப்பதும் ஒழுங்கா மெயின்டெயின் பண்ணுங்கமேலும்
-
மஹாராஷ்டிராவில் கொட்டி தீர்த்தது கனமழை: அடுத்தடுத்து நிலச்சரிவு; பஸ், ரயில் சேவை பாதிப்பு
-
பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அரசு கலைப்பு
-
அயோத்தி ராமர் கோவில் நிர்வாகிகளின் ராஜினாமா ஏற்பு! விசாரணை அறிக்கையை ஆய்வு செய்ய முடிவு
-
கட்டாய மத மாற்ற புகார்: ஐ.டி., பெண் ஊழியருக்கு ஜாமின்
-
இந்தோனேஷியா நாட்டில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
-
சிறுமி பாலியல் பலாத்காரம்; முதியவருக்கு '42 ஆண்டு'