மீனவர்களுக்கு மானிய விலையில் இயந்திரம்

ராமநாதபுரம்:

பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு ரூ.40.18 லட்சம் மதிப்பீட்டில் மானிய விலையில் மீன்பிடி இயந்திரங்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ் வழங்கினார். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார். பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம், மாநில அரசு திட்டத்தின் கீழ் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மானிய விலையில் வெளிப்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. 47 மீனவர்களுக்கு ரூ.40 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான இயந்திரங்கள் வழங்கப்பட்டது. இயந்திரம் ரூ.85 ஆயிரத்து 500 க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் 60 சதவீதம் மானியமாக ரூ.51ஆயிரத்து 300 அரசு வழங்கியது. மீனவர் நலத்துறை துணை இயக்குநர் சின்னகுப்பன், உதவி இயக்குநர்கள் ராஜேந்திரன், நடராஜன் பங்கேற்றனர். ––

Advertisement