அயோத்தி கோவில் காணிக்கை முறைகேடு காங்கிரஸ் நுாதன போராட்டம்
புதுச்சேரி: அயோத்தி ராமர் கோவில் காணிக்கை முறைகேட்டை கண்டித்து, புதுச்சேரி காங்கிரசார் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அயோத்தியில் ராமர் கோவில், கடந்த 2024ம் ஆண்டு புதிதாக கட்டப்பட்டு கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. இக்கோவிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் காணிக்கை வழங்கி வருகின்றனர். இக்கோவில் காணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில், ராமர் கோவிலில் காணிக்கை முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முத்தியால்பேட்டை தொகுதி காங்., சார்பில் நேற்று மாலை நூதன முறையில் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு முத்தியால்பேட்டை தொகுதி காங்., பொறுப்பாளரும், மாநில செயலாளருமான ஈரம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னிலை வகித்தார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் துணை சபாநாயகர் பாலன், இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முத்தியால்பேட்டை தெ ன்கலை சீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள பெருமாள் மற்றும் ராமர் சன்னதிக்கு சென்று அயோத்தி ராமர் கோவிலில் காணிக்கை முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்று சாமியிடம் வேண்டுதல் வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்
-
அரசு குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும்
-
அசிஸ்டெண்ட் பணிக்கு 14ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு
-
மத்திய அமைச்சர் சுற்று பயணம் பாதியில் ரத்து: புதுச்சேரியில் பரபரப்பு
-
'பின்' முறையில் இருந்து கைரேகைக்கு தாவும் மக்கள்
-
ஐ.பி.ஓ.,: 'ஆல்பைன் டெக்ஸ்வேர்ல்டு' ரூ.126 கோடி திரட்ட திட்டம்
-
நெய்வேலி ரவுடி குண்டாசில் கைது