அரபு நாடுகளிலிருந்து வந்த ஆர்டர்கள்; மீள்கிறது பொள்ளாச்சி தேங்காய் ஏற்றுமதி
சென்னை: மேற்காசிய போர் பதற்றங்களால் பொள்ளாச்சியிலிருந்து தேங்காய் ஏற்றுமதி செய்வது பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அரபு நாடுகளிலிருந்து தேங்காய் ஏற்றுமதிக்கு ஆர்டர்கள் வந்து கொண்டிருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வர்த்தகர்கள் தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் தேங்காய் ஏற்றுமதியில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி முக்கிய மையமாக செயல்படுகிறது. பொள்ளாச்சி பகுதியில் விளையும் தேங்காய் மற்றும் கொப்பரையில் 80 சதவீதம் அரபு நாடுகளுக்கு செல்கிறது. தினந்தோறும் 30 டன் தேங்காய் சென்று கொண்டிருந்த நிலையில் போரால் ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டது. போர் பதற்றம் குறைந்த பின் சரக்கு போக்குவரத்து கட்டண உயர்வால் ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனால் தேங்காய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருந்தது.
தற்போது சரக்கு போக்குவரத்து கட்டணம் பழைய நிலைக்கு வரவில்லையென்றாலும், ஓரளவுக்கு குறைந்துள்ளது. கடந்த வா ரத்திலிருந்து சவுதி அரேபியா, துபாய், ஓமன் ஆகிய நாடுகளிலிருந்து தேங்காய் ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்தாண்டு ஒரு டன் தேங்காய் 65,000 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது 40,000 ரூபாயாக குறைந்துள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அடேய் எந்த ஊர் நாட்டுக்காவது ஏற்றுமதி ஏதாவது செய்யுங்கள் ஆனால் இங்குள்ள உள்நாட்டு மக்களுக்கு விலையை ஏற்றி தொலையாதீர்கள் அறுபது எழுபது என்று அதிக விலைக்கு விற்கிறார்கள்
சென்ற வாரம் தேங்காய் கிலோ 40/- ஏற்றுமதி மகிழ்ச்சியால் இன்று கிலோ 50/-
மகிழ்ச்சி வரவேற்கிரோம்மேலும்
-
'எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய அரசு தயார்!: மழை நிலவரம், விவசாய பணிகள் கண்காணிப்பு
-
18 பெண்களின் உயிரை பலி வாங்கிய இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு 'சீல்'
-
அயோத்தி கோவில் காணிக்கை முறைகேடு காங்கிரஸ் நுாதன போராட்டம்
-
முதல்வரின் தனி செயலாளருக்கு வாழ்த்து
-
இடிந்து விழும் நிலையில் புராதன கோவில் புனரமைக்க இழுத்தடிக்கும் அறநிலையத்துறை
-
நீர்த்தேக்க தொட்டி 'பம்ப் ஆப்பரேட்டர்' பணியிடம்... 1,800 காலி: குடிநீர் வினியோகம், பராமரிப்பு பணிகள் பாதிப்பு