இந்தியாவுக்கு எதிரான செயல்களைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; நியூசிலாந்து பிரதமர் திட்டவட்டம்

6


நமது நிருபர்




'காலிஸ்தான் கோரும் பிரிவினைவாதிகளின் இந்தியாவுக்கு எதிரான குற்றச் செயல்களைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம்' என நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில செய்தி சேனலுக்கு, அவர் அளித்த பேட்டி: நியூசிலாந்து பேச்சு சுதந்திரத்தை மதிக்கிறது என்றாலும், எந்தவொரு அச்சுறுத்தல் அல்லது வன்முறையும் சட்டத்தின் கீழ் கடுமையாகக் கையாளப்படும். காலிஸ்தான் பிரச்னை இந்தியாவில் துயரத்தை ஏற்படுத்தியது. இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், அது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.

நாங்கள் ஜனநாயக நாடாக இருந்தாலும், கருத்துச் சுதந்திரத்தையும், பேச்சுச் சுதந்திரத்தையும் விரும்புகிறோம். மக்கள் எங்கள் விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். அது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு தடையாக மாறாது. குற்றச் செயல்களைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.

எந்தவொரு அச்சுறுத்தல் அல்லது வன்முறைச் செயல்களும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. எங்கள் போலீசார் அந்தப் பிரச்னைகள் குறித்து விழிப்புடன் இருந்து, அவற்றைச் சிறப்பாகக் கையாள்கின்றனர். இவ்வாறு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் கூறினார்.

Advertisement