தகுதியான அனைவருக்கும் கட்டாயம் கிடைக்க வேண்டும்; முதல்வர் விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு
சென்னை: ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தகுதியான அனைத்து பயனாளிகளுக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் முழுமையாகச் சென்று சேர வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது ஒரு சில பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்று சேருவதில்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தகுதியான அனைத்து பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டார். அவர் கூறியதாவது:
ஊரகவளர்ச்சி துறையில் தகுதியான அனைத்து பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் சென்று சேரவேண்டும்; ஒரு சில பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்று சேர்வதில்லை என புகார்கள் வருகின்றன
பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்; திட்டங்கள் சென்று சேர்வது குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
இலவச பஸ் பயணம் எல்லா மகளிர்களுக்கு ஏன்? வசதி படைத்தவர்களுக்கு ஏன் ? ரோட்டில் சும்மா நடந்து போகிறவர்களும் ஒரு நிறுத்தத்திற்கு இங்கு ஏறி அங்கு இறங்கி செல்கிறார்கள். காசு கொடுத்து டிக்கட் வாங்கும் ஆண்களுக்கு பஸ்ஸில் நிற்பதற்கு கூட இடம் கிடைக்க மாட்டேங்கிறது. அதனால் மகளிர்களுக்கு மினிமம் 2 அல்லது 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கனும். அட்லீஸ்ட் இலவச மகளிர் டிக்கட் பிரிண்ட் பண்ணும் செலவாவது தேறும். எதற்காக மகளிர்களுக்கு இலவச டிக்கட் வழங்கணும்? டிக்கட் இல்லாம அப்படியே போகலாமே?
உங்கள் கட்சியில் எம்எல்ஏ ஆகவேண்டும் என்றால் ரசிகர் மன்ற தலைவராக இருந்திருக்க வேண்டும் என்பது போலவா?
இலவசமாய் எது கிடைத்தாலும் அதன் அருமை மனிதனுக்கு தெரியாது . ஆதாலால் , கல்வியும் மருத்துவமும் மட்டுமே இலவசமாய் கொடுக்கவேண்டும் . மற்ற எல்லாவற்றையும் அவரவர் சொந்த செலவில் ஏற்கவேண்டும் .
முதலில் பல கோடி தகுதி இல்லாதவர்களுக்கு கிடைக்கின்ற அனைத்து மக்களுக்கும் ஏராளமான இலவசத்தை நிறுத்துங்கள்.
தகுதியான அனைவருக்கும் கட்டாயம் கிடைக்க வேண்டும். அதுவும் உழைத்து, படித்து, களைத்த தகுதியானவர்களுக்கு மட்டும்தான் கிடைக்க வேண்டும். தாங்கள் கரூர் செல்லும் போது இவ் வார்த்தைகளை நினைவில் வையுங்கள் மாண்புமிகு எங்கள் முதல்வரே!