ஜம்மு காஷ்மீரில் 5 நாட்களாக நடந்த துப்பாக்கிச்சண்டை; பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 5 நாட்களாக நடந்து வந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் பேரில், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தங்களை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்ததை உணர்ந்த பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்த துவங்கினர். இதற்கு பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தக்க பதிலடி கொடுத்தனர். கடந்த 5ம் தேதி பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் 5வது நாளாக இன்றும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒரு முக்கியப் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

அப்பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா? என்று தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement