அரசு வக்கீல்கள் நியமனம் 100% நியாயமாக நடைபெறும்; அமைச்சர் நிர்மல்குமார் உறுதி
சென்னை: அரசு வக்கீல்கள் நியமனம் 100% நியாயமாக நடைபெறும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: அரசு வக்கீல் நியமனம் முழுமையாக வெளிப்படையாக நடக்கிறது. இது குறித்து தவறான தகவல் பரப்பி விடப்படுகிறது. அவை எதுவும் உண்மையல்ல. அரசு வக்கீல்கள் நியமனம் 100% நியாயமாக நடைபெறும். இதுவரை யாரும் அரசு வக்கீல் நியமிக்கப்படவில்லை. அரசு வக்கீல்கள் நியமத்திற்கு யாராவது பணம் கேட்டால் புகார் அளிக்கலாம். யாராவது அரசு வக்கீல்கள் நியமனத்திற்கு பணம் பெற்றிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை 3 மாவட்டங்களுக்கு மட்டுமே அரசு வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நியமனம் ஆறு மாதங்களுக்கு தற்காலிகமானது. அனைத்து துறைகளையும் சீரமைக்க வேண்டியுள்ளது. அதை விடுத்து அரசு ஊழியர்களை தவறு சொல்ல கூடாது. துறைகளை சீரமைத்து விட்டு ஆய்வு செய்வதே சரி. ஆகவே அவர்களுக்கு தொந்தரவு தரும் வகையில் தேவையற்ற ஆய்வுகளை செய்ய கூடாது என முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். ஒரு சிலர் சொந்த ஊர்களின் முன்னேற்றத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என விருப்பப்படுவார்கள்.
அந்த நோக்கத்தில் அமைச்சர் கீர்த்தனாவும் சென்றிருக்கலாம். ஆனால் அவர் எந்த நோக்கத்தில் சென்றார் என முழுமையாக தெரியவில்லை. திமுக ஆட்சியின் போதே கரூருக்கு செல்ல முதல்வர் விஜய் திட்டமிட்டார்.
முதல்வராக இருக்கும் போதே கரூருக்கு செல்ல முடியாத வகையில் திமுக முட்டுக்கட்டை போட முயல்கிறது. இப்போதே இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால், அவர்கள் ஆட்சியில் திமுக எப்படி செயல்பட்டு இருக்கும்? முதல்வரை பொறுத்தவரை எப்போதும் மக்களை சந்திக்க ஆரவாரம் இன்றி செல்லவே விரும்புவார்.
கரூருக்கு சென்று முதல்வர் விஜய் மக்களை சந்திப்பார். திமுக ஆட்சியில் விஜய் வீடு மிகப்பெரிய அளவில் கண்காணிப்பு வளையத்தில் இருந்தது. கரூருக்கு முதல்வர் செல்வதால் திமுகவுக்கு என்ன பயம்? ஏன் மனு போடுகிறார்கள்? ஆட்சியில் இருக்கும்போது தான் செய்தீர்கள். இப்போதே இப்படியென்றால், அவர்கள் ஆட்சியில் இருந்தபோது என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என யோசித்து பாருங்கள். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சென்னையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (7)
ராஜன் - ,
08 ஜூலை,2026 - 06:26 Report Abuse
ஆடு திருடிய வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப் பட்ட வழக்கறிஞர் எப்படி அரசு வழக்கறிஞர் ஆக நியமிக்கப்பட்டார் 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
07 ஜூலை,2026 - 19:13 Report Abuse
கரூருக்கு முதல்வர் விஜய் இப்போது சென்றால் திராவிட மாடல் அரசு செய்த எல்லா திப்பில்லாட்டங்களும் அநியாயங்களும் வெளியே தெரிந்துவிடுமே என்ற பயம்தான் அவர்களுக்கு. ஆனால் அங்கே மக்கள் வரிசை வரிசையாக நின்று முதல்வரை இப்போது சந்தித்து நடந்த அக்கிரமங்களை புட்டு புட்டு எல்லாவற்றையும் சொல்லோவிடுவார்களோ என்ற பயந்தான் நீதிமன்ற போய் அதற்கு தடை வாங்க முயற்சித்தனர் பாவம் கிடைக்கவில்லை கெட்ட எண்ணம் கொண்டவர் எதை செய்தாலும் அதில் அவர்கள் தேர்ச்சிபெற மாட்டார்கள் வீழ்ச்சியைத்தான் காண்பார்கள் என்பதற்கு இப்பொது இது ஒரு சான்று.
நீதி மன்ற தீர்ப்பே ஒன்றே போதும் இது அவர்களுக்கு ஒரு மரண அடி எழுந்திருக்க முடியாத அடி ஆயிற்றே இனியாவது ஒதுங்கி இருந்தால் சரி. 0
0
Reply
சூர்யா - ,
07 ஜூலை,2026 - 16:20 Report Abuse
பாவம்! சக அமைச்சர்கள் இழுத்து வரும் தேவையற்ற சர்ச்சைகளுக்கு சமாளிப்பு செய்வதிலேயே இவருக்கு நேரம் போய் விடும் போல? அப்புறம் எப்படி இவரால் இவர் துறை பணியை முழுமையாக செய்ய முடியும்? 0
0
Reply
V K - Chennai,இந்தியா
07 ஜூலை,2026 - 14:56 Report Abuse
100% சதவீதம் பணம் வாங்கி கொண்டு
நியாயமாக நடை பெறுகிறது 0
0
Reply
N. Ramachandran - Bangalore,இந்தியா
07 ஜூலை,2026 - 14:32 Report Abuse
நாங்க நம்பிட்டோம்... உங்கள போல அரசியல்வாதிகளை நம்பி, அரசு வேலை கொடுப்பிங்க என்று நம்பி கோடிக்கணக்கான பட்டதாரிகள் தங்கள் 59 வயது வரை வேலையில்லாமல் டாஸ்மாக் தான் கதி என்று கடைசி காலத்தை கழித்துக்கொண்டு வாழ்கிறார்கள்... அணில்கள் வாழ்க... தற்குறிகள் வெல்க... டாஸ்மாக் வாழ்க... அஇஅதிமுக வாழ்க... தி மு க வாழ்க... சைக்கோ வாழ்க... கம்மிகள் வாழ்க வாழ்க... மாற்றம் வந்துடிச்சி டா டோய்... 0
0
Reply
V S Venkataramani - ,இந்தியா
07 ஜூலை,2026 - 13:02 Report Abuse
வாங்கி இருந்தால் நடவடிக்கை? 0
0
Reply
சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி நாயக்கர் - ,
07 ஜூலை,2026 - 12:31 Report Abuse
இந்த ஆள் ஏன் நீதி துறைகளை பற்றி பேசுகிறார்? 0
0
Reply
மேலும்
-
தகுதியான அனைவருக்கும் கட்டாயம் கிடைக்க வேண்டும்; முதல்வர் விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு
-
ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள்; அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு
-
மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு
-
இந்தியா, இந்தோனேஷியாவை இணைக்கும் கலாசார பாரம்பரியம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
அணைகள் நீர்மட்டம்
-
ஜம்மு காஷ்மீரில் 5 நாட்களாக நடந்த துப்பாக்கிச்சண்டை; பயங்கரவாதி சுட்டுக்கொலை
Advertisement
Advertisement