தேர்தல் வழக்கில் முதல்வர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ்
சென்னை: பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளின் தேர்தல் வழக்குகள் தொடர்பாக முதல்வர் விஜய்க்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
முதல்வர் விஜய், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நான்கு வழக்குகளும் இன்று (ஜூலை 07) ஐகோர்ட் நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் முதல்வர் விஜய்க்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மனுக்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்த பின் 3 வாரங்களில் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதேபோல் அமைச்சர் ஆதவ், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 2021ம் ஆண்டு காட்பாடி தொகுதியில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வி.ராமு தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சிறப்பு வீடியோ!
முதல்வர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ்; வழக்கின் பின்னணி குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (6)
Alphonse Mariaa - Coimbatore,இந்தியா
08 ஜூலை,2026 - 08:57 Report Abuse
நீதிமன்ற நேரம் மற்றும் அலுவலக உழைப்பை வீணாக்குவதை தடை செய்ய வேண்டும் 0
0
Reply
Sun - ,
07 ஜூலை,2026 - 15:51 Report Abuse
இது போன்ற தேர்தல் குறித்த வழக்குகளில் நீதி எவ்வளவு விரைவாக கிடைக்கும் என்பது இன்பதுரை Vs அப்பாவு வழக்கைப் பார்த்தாலே நமக்கு நன்கு தெரிந்து விடும். 0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
07 ஜூலை,2026 - 15:14 Report Abuse
இந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதை தேர்தல் ஆணையத்திடம் தான் கேட்க வேண்டும். நீதிமன்றம் ஏன் வேட்பாளரிடம் கேட்கிறது? விஜய் என்ன சொல்வார் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது? நீதிமன்றத்தின் மொத்த நேர விரயம். 0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
07 ஜூலை,2026 - 14:37 Report Abuse
இந்த கேஸ் 2031 இல் விசாரணைக்கு வரும், அடுத்த தேர்தல் முடிந்ததால், வழக்கு தள்ளுபடி. 2021,போட்ட வழக்கில் இப்படிதான் நடந்தது 0
0
Reply
PVSR - ,
07 ஜூலை,2026 - 13:35 Report Abuse
தேர்தல் வெற்றி தோல்வியை எதிர்த்து போடப்படும் வழக்குகளை நீதிமன்றம் எடுத்துக் கொள்ளக் கூடாது இது எல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் நேர விரயம். வாதங்களை விவாதிக்க வக்கீல்களுக்கு லட்சக்கணக்கில் வருமானம் வரும் இது ஒன்றுதான் பிரயோஜனம். 0
0
Reply
GMM - KA,இந்தியா
07 ஜூலை,2026 - 11:49 Report Abuse
தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு இறுதியானது. எந்த நீதிமன்றமும் ஜனாதிபதி அனுமதி இல்லாமல் விசாரிக்க முடியாது. 0
0
Reply
மேலும்
-
தகுதியான அனைவருக்கும் கட்டாயம் கிடைக்க வேண்டும்; முதல்வர் விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு
-
ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள்; அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு
-
மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு
-
இந்தியா, இந்தோனேஷியாவை இணைக்கும் கலாசார பாரம்பரியம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
அணைகள் நீர்மட்டம்
-
ஜம்மு காஷ்மீரில் 5 நாட்களாக நடந்த துப்பாக்கிச்சண்டை; பயங்கரவாதி சுட்டுக்கொலை
Advertisement
Advertisement