பேரவை கூட்டம்

மேலுார்: மேலுாரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் பேரவை கூட்டம் நடந்தது. இணைச் செயலாளர்கள் தனபாலன், செந்தில்குமார் வரவேற்றனர். தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் திருமுருகன், பொருளாளர் மாணிக்கம் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் நீதிராஜன், மாவட்ட தலைவர் தமிழ், பொருளாளர் பரமசிவன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோர் பேசினர். பழைய ஓய்வூதிய திட்டம், கட்டணமில்லா சிகிச்சை, அரசுத் துறைகளில் காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி சுந்தரபாண்டி நன்றி கூறினார்.

Advertisement