பாகிஸ்தான் படைகள் மீது பலூச் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: வீரர்கள் 9 பேர் பலி
நமது நிருபர்
பாகிஸ்தான் படைகள் மீது பலூச் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதில் வீரர்கள் 9 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், இன்று ஜியாரத் பகுதியில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பலுாச் தனி நாடு கோரும் கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், வீரர்கள் 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் பிணைக் கைதிகளாக கடத்தி செல்லப்பட்டனர்.
பின்னர் பாதுகாப்புப் படைகள் நடத்திய தொடர் நடவடிக்கையின் போது அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டதாகவும் பலுசிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிந்த் தெரிவித்தார். இந்த நடவடிக்கையின்போது 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
''பயங்கரவாதிகளுக்கு எதிரான உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகள் தொடரும். ஒவ்வொரு தாக்குதலுக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும்'' என்று செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிந்த் இந்த தாக்குதலுக்கு பலூச் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ) பொறுப்பேற்றது.
இந்த பலூச் கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள துப்பில்லாத பாக்கிஸ்தான் அரசு, இந்தியாவை மிரட்டிக்கொண்டு, இந்தியா மீது போர் செய்ய எண்ணுகிறது. துப்புக்கெட்ட பாக்கிஸ்தான்.மேலும்
-
தகுதியான அனைவருக்கும் கட்டாயம் கிடைக்க வேண்டும்; முதல்வர் விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு
-
ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள்; அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு
-
மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு
-
இந்தியா, இந்தோனேஷியாவை இணைக்கும் கலாசார பாரம்பரியம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
அணைகள் நீர்மட்டம்
-
ஜம்மு காஷ்மீரில் 5 நாட்களாக நடந்த துப்பாக்கிச்சண்டை; பயங்கரவாதி சுட்டுக்கொலை