விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

தேனி:தேனி மாவட்ட விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ள கலெக்டர் வைத்திநாதன் அறிவுறுத்தி உள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, இந்தாண்டு எல் நினோவால் பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே நெல், எள், நிலக்கடலை, மக்காச்சோளைம், துவரை, பருத்தி ஆகிய 7 பயிர்கள் பிரதமர் பயிர்காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இப்பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஜூலை 25க்குள் தேசிய பயிர் காப்பீடு இணையதளத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம்.

குறுவை நெற்பயிர், எள்ளுக்கு ஜூலை 31க்குள் காப்பீடு செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் பெற்றவர்கள் அங்கேயே காப்பீடு செய்யலாம். பிற விவசாயிகள் இ-சேவை மையங்கள் மூலம் பயிர் காப்பீடு இணையதளத்தில் காப்பீடு செய்யலாம். காப்பீடு விண்ணப்பிக்க அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கி விவரம், ஆதார் அட்டை நகல் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement