அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் அலட்சியம் காட்டும் போலீசார்
பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் –1, சப் இன்ஸ்பெக்டர் –3 , போலீசார் –18 போலீசார் பணிபுரிந்து வருகின்றனர்.
நகரத்தில் நான்குமுனை சந்திப்பு மட்டுமே, இரு போக்குவரத்து போலீசாரால், காலை 8:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை வழி காட்டப்படுகிறது.
மற்றபடி போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் காலை, மாலை பள்ளி விடும் நேரங்களில் பண்ருட்டி, சுப்ராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முத்தையர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தலா ஒரு போலீசார் பணியில் இருக்கின்றனர்.
நகரங்களில் கடந்த சில ஆண்டுகளாக, நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றிய பின்பும், போக்குவரத்து போலீசார் பராமரிப்பு இல்லாததால், அனுமதியில்லாமல் ஆட்டோ ஸ்டேண்டகள் 5 இடங்களில் , கடலுார் சாலை, கும்பகோணம் சாலை, ரயில்வே மேம்பால சர்வீஸ் சாலை, இந்திராகாந்தி சாலை, ராஜாஜி சாலை உள்ளிட்ட பகுதியில், என வழிநெடுக ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.
ஆனால் போக்குவரத்து போலீசார் சார்பில் வாரத்தில் ஒரு நாள், ஒரு மணி நேரம் கூட போக்குவரத்து நெரிசலை, சீர்படுத்திட முன்வருவதில்லை.
தினந்தோறும் 3 சப் இன்ஸ்பெக்டர்களும், சென்னை சாலை, கடலுார் சாலை, தட்டாஞ்சாவடி ஆகிய பகுதியில் வாகன சோதனை நடத்துவதில் மட்டுமே ஆர்வம் செலுத்துகின்றனர்.
நெரிசல் குறைவாக இருந்த பண்ருட்டி நகரத்தில் கூட தற்போது போக்குவரத்து போலீசார் அலட்சியம் காரணமாக நெரிசல், ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. மாவட்ட போலீஸ் உயரதிகாரிகள் பண்ருட்டியில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
'எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய அரசு தயார்!: மழை நிலவரம், விவசாய பணிகள் கண்காணிப்பு
-
18 பெண்களின் உயிரை பலி வாங்கிய இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு 'சீல்'
-
அயோத்தி கோவில் காணிக்கை முறைகேடு காங்கிரஸ் நுாதன போராட்டம்
-
முதல்வரின் தனி செயலாளருக்கு வாழ்த்து
-
இடிந்து விழும் நிலையில் புராதன கோவில் புனரமைக்க இழுத்தடிக்கும் அறநிலையத்துறை
-
நீர்த்தேக்க தொட்டி 'பம்ப் ஆப்பரேட்டர்' பணியிடம்... 1,800 காலி: குடிநீர் வினியோகம், பராமரிப்பு பணிகள் பாதிப்பு