கள்ளக்குறிச்சி ஒன்றிய வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பத்மஜா ஆய்வு செய்தார்.
மேலுார் கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரியில் பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் பத்மஜா, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து சுகாதார மையத்தினை துாய்மையாக வைக்கவும், சுத்தமான குடிநீர் வழங்கும், கழிவறைகளை துாய்மையாக வைக்கவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து சிறுவத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி, சிறுவத்துார் மாதிரி மகளிர் விடுதி ஆகியவற்றை ஆய்வு செய்த கலெக்டர், மாணவர்களுக்கு தரமான உணவு சரியான நேரத்தில் வழங்க வேண்டும். குடிநீர், உணவு பொருட்களை முறையாக பராமரிக்கவும், கழிவறைகளை துாய்மையாக வைக்க வேண்டும் என விடுதி அலுவலர்களுக்கு அறிவுறுத்தனார்.
மேலும் வரதப்பனுார் நியாயவிலை கடையினை பார்வையிட்டு, இருப்பு விபரம், வழங்கப்படும் பொருட்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் வகையில் அலுவலர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என கலெக்டர் பத்மஜா தெரிவித்தார்.
மேலும்
-
தகுதியான அனைவருக்கும் கட்டாயம் கிடைக்க வேண்டும்; முதல்வர் விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு
-
ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள்; அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு
-
மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு
-
இந்தியா, இந்தோனேஷியாவை இணைக்கும் கலாசார பாரம்பரியம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
அணைகள் நீர்மட்டம்
-
ஜம்மு காஷ்மீரில் 5 நாட்களாக நடந்த துப்பாக்கிச்சண்டை; பயங்கரவாதி சுட்டுக்கொலை