கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லுாரியில் மருத்துவ விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டு அரசு கலை–அறிவியல் கல்லுாரியில் சேர்க்கை பெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒருவார கால அறிமுக சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, நேற்று நடந்த 5–ம் நாள் நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் தர்மராஜா தலைமை தாங்கினார். கணினி அறிவியல் துறை தலைவர் கிருஷ்ணகுமார் வரவேற்றார்.
கள்ளக்குறிச்சி மருத்துவர் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவம் சார்ந்த விளக்கங்களை அளித்து, இன்றைய காலகட்டத்தின் மருத்துவ அறிவியல் முன்னேற்றம் குறித்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் மாணவர்களின் பல்வேறு வினாக்களுக்கு விடையளித்து மருத்துவம் , உடல்நலம், கல்வியறிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குநர் சரவணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லுாரி ஆங்கிலத்துறை தலைவர் முருகானந்தன் நன்றி கூறினார்.
மேலும்
-
தகுதியான அனைவருக்கும் கட்டாயம் கிடைக்க வேண்டும்; முதல்வர் விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு
-
ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள்; அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு
-
மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு
-
இந்தியா, இந்தோனேஷியாவை இணைக்கும் கலாசார பாரம்பரியம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
அணைகள் நீர்மட்டம்
-
ஜம்மு காஷ்மீரில் 5 நாட்களாக நடந்த துப்பாக்கிச்சண்டை; பயங்கரவாதி சுட்டுக்கொலை