கோடவுனில் தீ விபத்து

நத்தம்: -மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மண்பானை தொழிலாளி முருகன் 55. இவர் எம்.ஜி.ஆர்., நகர் வீட்டின் அருகே பானைகளை பாதுகாக்க அமைத்துள்ள கூரை கோடவுனில் தீப்பற்றியது. தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள் அங்கிருந்த பானைகள், தளவாட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement