கூட்டுறவு வார விழா

தேனி, ஜூலை 8–

தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வைத்திநாதன் தலைமையில் கூட்டுறவு வார விழா நடந்தது. மதுரை மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் வாஞ்சிநாதன், தேனி கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் நர்மதா முன்னிலை வகித்தனர். கடந்தாண்டு சிறப்பாக சேவை புரிந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார். சிறுபான்மையினருக்கான கடன் திட்டங்களை செயல்படுத்தியதற்காக ராயப்பன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலர் கலையரசி, மற்ற கடன் திட்டங்கள், சேவைகளை செயல்படுத்தியற்காக கே.கே.,பட்டி தொடக்க கூட்டுறவு சங்கம், கொத்தப்பட்டி, சி.புதுப்பட்டி, கம்பம் உள்ளிட்ட 20 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Advertisement