தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்   

சிவகங்கை: சிவகங்கை தபால் கோட்ட நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க செயலாளர் தமிழ்வாணன் தலைமை வகித்தார். அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க செயலாளர் நடராஜன், அஞ்சல் ஊழியர் சங்க 3 ன் செயலாளர் மாதவன், தென்மண்டல செயலாளர் செல்வன் கோரிக்கையை விளக்கி பேசினர்.

சங்கங்களின் பொறுப்பாளர் நாகலிங்கம் ஏற்பாடுகளை செய்திருந்தார். தலைமை அலுவலகத்தின் தரத்தை குறைக்கும் விதமாக துணை தபால் நிலையங்களை மூடி வருவது, கோட்ட நிர்வாக அதிகாரிகள் ஊழியர் விரோத போக்கில் ஈடுபடுவது போன்றவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ///

Advertisement