கடவுள் செய்த உதவி: சுப்ரீம் கோர்ட் நீதிபதி மோகனா உருக்கம்
கோவை: கடவுள் பல ரூபங்களில் எனக்கு உதவி செய்துள்ளார். ஒரு மனிதனுக்கு குரு நல்லபடியாக அமைய வேண்டும். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி என சுப்ரீம் கோர்ட் நீதிபதி வி.மோகனா தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட தமிழகத்தை சேர்ந்த வி.மோகனாவுக்கு கோவை வக்கீல் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
இதில் நீதிபதி மோகனா பேசியதாவது: வக்கீல் சங்கம் நடத்தும் விழாவில் பங்கேற்பது பிறந்த வீட்டுக்கு வந்த சந்தோசத்தை தருகிறது. ஒரு மனிதனுக்கு படிப்பு தான் முதல் படி. நான் படிக்கும் காலத்தில் கல்லுாரியில் வசதி குறைவு. விடுதி வசதி கிடையாது. ஆனால் இப்போதெல்லாம் சட்ட கல்லுாரிகளில் நவீன வசதி வந்து விட்டது. அதை இப்போதைய இளம் மாணவர்கள் பயன்படுத்தி உயர்ந்து வர வேண்டும்.
கோவை நீதிமன்றத்தில் தான் இன்டர்ன்சிப் பயிற்சி எடுத்தேன். அதன் பிறகு மூத்த வக்கீல் பஞ்சாபகேசனிடம், 1987 ல் ஜூனியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. சீனியர் எனக்கு நிறைய உதவி செய்தார். அவர் தான் எனக்கு குருகுலம். நிறைய கற்றுக்கொண்டேன். அவரது அலுவலகத்தில் ஜூனியராக இருந்தது திருப்பு முனையை ஏற்படுத்தியது.
எனது குடும்பத்தினர் பலர் டில்லியில் பணியாற்றியதால், 1992ல் அங்கு சென்று பயிற்சி செய்தேன். கோவையில் கிடைத்த அடிப்படை தான் டில்லியில் நிலை நிறுத்த முடிந்தது. எனது அடையாளத்தை காட்ட முடிந்தது. கடவுள் பல ரூபங்களில் எனக்கு உதவி செய்துள்ளார். ஒரு மனிதனுக்கு குரு நல்லபடியாக அமைய வேண்டும். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. எனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டதால் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக உயரும் வாய்ப்பு கிடைத்தது.
சீனியர் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை இளம் வக்கீல்கள் காப்பாற்ற வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். ஜூனியர்களுக்கு நிறைய கடமைகள் உள்ளது. சீனியர்கள் சொல்வதை கேட்டு மதித்து நடந்து கொண்டால் இளம் வக்கீல்கள் முன்னேறலாம். இளம் வக்கீல்கள் வளர்ந்து பெரிய பதவிக்கு வர வேண்டும். இவ்வாறு நீதிபதி மோகனா பேசினார்.
நம் த்ராவிட பரம்பரைக்கு ஆகாதே
நீதிபதி அம்மா! மூன்று வேளையும் சப்பாத்தி தானா ?
இது ஒரு கேள்வியா?மேலும்
-
'எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய அரசு தயார்!: மழை நிலவரம், விவசாய பணிகள் கண்காணிப்பு
-
18 பெண்களின் உயிரை பலி வாங்கிய இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு 'சீல்'
-
அயோத்தி கோவில் காணிக்கை முறைகேடு காங்கிரஸ் நுாதன போராட்டம்
-
முதல்வரின் தனி செயலாளருக்கு வாழ்த்து
-
இடிந்து விழும் நிலையில் புராதன கோவில் புனரமைக்க இழுத்தடிக்கும் அறநிலையத்துறை
-
நீர்த்தேக்க தொட்டி 'பம்ப் ஆப்பரேட்டர்' பணியிடம்... 1,800 காலி: குடிநீர் வினியோகம், பராமரிப்பு பணிகள் பாதிப்பு