ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு; பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 24 பேர் கைது

3



நமது நிருபர்




காலிஸ்தானி பிரிவினைவாத கும்பல் தலைவன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறித்துள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு நவம்பரில் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொலை செய்யப்பட்டான். தொடர்பாக இந்திய சிறையில் உள்ள ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி சதிந்தர்ஜீத் சிங் என்ற கோல்டி பிரார் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைச் சீர்குலைத்தது. ஏனெனில், அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவை இந்தக் கொலையுடன் தொடர்புபடுத்த முயன்றார். இந்தக் குற்றச்சாட்டுகளை உள்நோக்கம் கொண்டவை என இந்தியா திட்டவட்டமாக நிராகரித்தது.

தற்போது ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் உட்பட 24 பேர் உலகம் முழுவதும் சர்வதேச நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக ⁠அமெரிக்க நீதித்துறை மற்றும் கனடா காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இவர்களில் 11 பேர் கலிபோர்னியாவிலும், ஒருவர் இந்தியாவிலும், ஒருவர் ஜார்ஜியாவிலும் கைது செய்யப்பட்டனர். 3 பேர் கனடாவிலும், ஒருவர் ஸ்பெயினிலும் கைது செய்யப்பட்டனர். மேலும் ஏழு பேர் ஏற்கனவே காவலில் இருந்தனர்.

Advertisement