ஈரானுக்கு எதிராக மற்றொரு ராணுவத் தாக்குதல்களுக்கு தயார்; அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
நமது நிருபர்
ஈரானுக்கு எதிராக மற்றொரு சுற்று ராணுவத் தாக்குதல்களுக்கு தயாராகி வருகிறோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: மோதல்கள் தொடர்ந்தால் ஈரான் மக்களின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த நேரிடும். ஈரானுக்கு எதிராக மற்றொரு சுற்று ராணுவத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா தயாராகி வருகிறது. நேற்று இரவு நாங்கள் அவர்களை மிகக் கடுமையாகத் தாக்கினோம். இன்றிரவும் நாங்கள் அவர்களை மீண்டும் கடுமையாகத் தாக்கக்கூடும்.
ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன்களையும், ஏவுகணையையும் ஏவி தாக்குதல் நடத்தியது. அந்த முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. ஈரான் படுகொலை செய்ய முற்படக்கூடிய நபர்களின் பட்டியலில் தனது பெயர் முதலிடத்தில் இருக்கிறது.
தான் தனது கடமையை மட்டுமே செய்வதால், அத்தகைய எந்த அச்சுறுத்தல்களாலும் தான் கலங்கவில்லை. ஒரு அதிபரின் வாழ்க்கை இயல்பாகவே ஆபத்தானது என்றாலும், அத்தகைய அச்சுறுத்தல்கள் தன்னைக் கவலையடையச் செய்யவில்லை. ஏனென்றால் நான் என் வேலையைச் செய்கிறேன். இதுவரை யாரும் செய்ததை விடச் சிறப்பாகச் செய்கிறேன் என்று நம்புகிறேன். நம்மிடம் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான ஒரு நாடு இருக்கிறது. டிக்டாக்கில் முதலிடத்தில் இருப்பதை நான் அதிகம் விரும்புகிறேன்.
ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை நாம் ஒருபோதும் பார்க்கப்போவதில்லை, ஏனென்றால் அது மிகவும் முக்கியமானது. எண்ணெய் விலைகள் படுவேகமாக சரிந்து வருகின்றன. இப்போது அவை சற்று உயரும், இது மிக விரைவில் முடிவுக்கு வரும். அவர்களிடம் அணு ஆயுதம் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி அவர்களிடம் அணு ஆயுதம் இருந்திருந்தால், அவர்கள் இஸ்ரேலை அழித்திருப்பார்கள். நான் அதிபராக இல்லாமல் இருந்திருந்தால், இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
பாஸ் நீ இல்ல யார் இல்லைனாலும் இஸ்ரேல் இருக்கும்
இவர் ஹிட்லர் விட மோசம்.மான் சைக்கோ.இவர் அழிவு உலகுக்கு தீபாவளிமேலும்
-
காஞ்சிபுரம் ராஜாஜி சந்தை காய்கறி விலை நிலவரம்
-
ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை 31 வரை அவகாசம் நீட்டிப்பு
-
வட துருவமும் தென் துருவமும் எப்படி ஒன்றாக முடியும்; திருமாவுக்கு வைகோ கேள்வி
-
முறைகேடு வழக்கு; எ.வ.வேலு ஜூலை 15ல் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
-
அணைகள் நீர்மட்டம்
-
ரூ. 8.5 கோடி சம்பளத்தில் வேலை: உதறிவிட்டு சொந்த நிறுவனம் துவக்கிய ஐஐடி பட்டதாரி