டில்லியில் 3 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் ஒருவர் பலி; பலரை மீட்கும் பணி தீவிரம்
புதுடில்லி: டில்லியில் கட்டுமானத்தின் போது 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
தலைநகர் டில்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில், நேற்று மாலை ரோகினி பகுதியில் நேற்று, கட்டுமானப் பணியில் இருந்த 3 மாடி அடுக்குக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், கட்டட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கினர். ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மேலும் 5 முதல் 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த விபத்திற்கு மோசமான வானிலைதான் காரணமா என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இடிபாடுகளுக்கு இடையிலிருந்து 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் போலீசார், டில்லி தீயணைப்புத் துறை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்
-
காஞ்சிபுரம் ராஜாஜி சந்தை காய்கறி விலை நிலவரம்
-
ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை 31 வரை அவகாசம் நீட்டிப்பு
-
வட துருவமும் தென் துருவமும் எப்படி ஒன்றாக முடியும்; திருமாவுக்கு வைகோ கேள்வி
-
முறைகேடு வழக்கு; எ.வ.வேலு ஜூலை 15ல் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
-
அணைகள் நீர்மட்டம்
-
ரூ. 8.5 கோடி சம்பளத்தில் வேலை: உதறிவிட்டு சொந்த நிறுவனம் துவக்கிய ஐஐடி பட்டதாரி