எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் முதல் இரவு அறை போல அலங்காரம்; டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட்
மும்பை: ரயிலில் முதல் வகுப்பு ஏசி படுக்கை வசதி பெட்டியை முதலிரவு அறைபோல் அலங்கரிக்கப்பட்ட வீடியோ வைரலான நிலையில், இந்த செயலில் ஈடுபட்ட நபர் மீது ரயில்வே நிர்வாகம் வழக்குப்பதிவு செய்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் ஜால்னா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி தனி அறை பெட்டியை சொகுசு ஓட்டலில், 'ஹனிமூன் சூட்' போல அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த அறையின் வெள்ளை மற்றும் சிவப்பு நிற பலூன்களும், இருக்கைகளில் 'ஹார்ட்டின்' வடிவில் ரோஜா இதழ்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், படுக்கைகளிலும் மலர்கள் தூவப்பட்டு, அருகே 'ஐ லவ் யூ' என்ற எழுத்துக்களும் இடம்பெற்றிருந்தன.
தங்களின் பயணத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்ற முயன்ற புதுமணத் தம்பதியின் செயல், வீடியோவாக சமூகவலைதளங்களில் வைரலானது. இருப்பினும், பலூன்கள், காகிதங்கள் எளிதில் தீப்பற்ற வாய்ப்புள்ளது எனப் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து நெட்டிசன்கள் சிலர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை; கடந்த 6ம் தேதி நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த தம்பதியினர், தாங்கள் புக் செய்திருந்த முதல் வகுப்பு ஏ.சி. பெட்டியை தனியார் அலங்கார நிறுவனத்தின் மூலம், அலங்கரித்துள்ளனர்.
உரிய அனுமதியின்றி அந்த அலங்கா நிறுவன ஊழியர் ரயில் பெட்டிக்குள் ஏறியுள்ளார். இந்த சம்பவத்தின் போது பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ரயிலில் அனுமதியின்றி நுழைந்தது, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது போன்ற குற்றங்களுக்காக, அந்த அலங்கார நிறுவன ஊழியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது," என்றும் கூறப்பட்டுள்ளது.
வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்
@twitter@https://x.com/rajtoday/status/2074880084708868273
twitter
கூட்ஸ் வண்டியிலே
ஒரு காதல் வந்திருச்சி
காதல் செய்வதற்க்கு
இடம் காலியாயிருக்கு
இந்தியன் ரயில்வே இதை குற்றமாக பார்க்காமல் ஒரு வியாபார யுத்தியாக பார்க்க வேண்டும். எதிர்காலத்தில் ஒரு நல்ல பேக்கேஜ் ஆக கொடுக்கலாம்.
பலூன் வெடித்து தீப்பற்றியதாக எந்த செய்தியும் இது வரை வந்ததில்லை.மேலும்
-
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு; இரு மருத்துவர்களிடம் விசாரணை
-
முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்; புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்
-
தங்கம் விலை இன்றும் சரிவு; சவரனுக்கு ரூ.240 குறைந்தது
-
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
டில்லியில் 3 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் ஒருவர் பலி; பலரை மீட்கும் பணி தீவிரம்
-
சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாகும்; ஜே.டி.வான்ஸ்