தி.மு.க., கவுன்சிலர் தரப்பு புகார் மீதும் வழக்குப்பதிவு
மதுரை: மதுரை கீழவெளிவீதி ஜாகீர்உசேன். பனையூர் கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து புகார் செய்த நிலையில் தி.மு.க., கவுன்சிலர் செய்யது அபுதாகீர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டியதாக போலீசில் புகார் அளித்தார். செய்யது அபுதாகீர், அவரது மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதேபோல் கவுன்சிலர் தரப்பில் அவரது மகன் சதாம் உசேன் அளித்த புகாரில், ஜாகீர் உசேனுக்கு கவுன்சிலர் 'சீட்' கிடைக்கவில்லை என்பதால் என் தந்தை மீது தொடர்ந்து அவதுாறை பரப்பி வருகிறார். ஆதாரமில்லாமல் பொய் புகார்களை அனுப்பி வருகிறார். வாட்ஸ் ஆப்பில் என் தந்தை, சகோதரர் குறித்து தவறான, அவதுாறான செய்திகளை பதிவிட்டிருந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது ஆபாசமாக திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்தார் என தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் ஜாகிர்உசேன் மீது விளக்குத்துாண் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும்
-
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
டில்லியில் 3 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் ஒருவர் பலி; பலரை மீட்கும் பணி தீவிரம்
-
சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாகும்; ஜே.டி.வான்ஸ்
-
இந்தியாவின் வளர்ச்சி ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு பலன் அளிக்கிறது; பிரதமர் மோடி
-
ஈரானுக்கு எதிராக மற்றொரு ராணுவத் தாக்குதல்களுக்கு தயார்; அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
-
தவறான தகவல்: 3 நிறுவனங்களுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., நோட்டீஸ்