தவறான தகவல்: 3 நிறுவனங்களுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., நோட்டீஸ்
புதுடில்லி: தவறாக வழிநடத்தும் விளம்பர வாசகங்களை வெளியிட்டதாகவும், உணவு பொருட்கள் மீதான லேபிள் விதிமுறைகளை மீறியதாகவும் கூறி, லோட்டே இந்தியா, பெர்ன்ஸ் என் பெட்டல்ஸ் மற்றும் குபேரா புட்ஸ் நிறுவனங்களுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிறுவனங்களின் சில உணவுப் பொருட்களில் இடம்பெற்றிருந்த விளம்பர வாசகங்கள் மற்றும் லேபிள்கள், நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு முரணாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, நுகர்வோரை தவறாக வழிநடத்தக்கூடிய வகையில் இடம்பெற்றிருந்த தகவல்கள், ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் தொடர்பான ஆதாரமற்ற விபரங்கள், கட்டாயமாக குறிப்பிட வேண்டிய விவரங்கள் முழுமையாக இடம்பெறாதது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக அந்நிறுவனங்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
மேலும்
-
உயர் அழுத்த மின் கம்பியில் கிழிந்து தொங்கும் விளம்பர பேனரால் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
-
‘யங் ரைசிங் ஸ்டார்ஸ்’ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
-
மாணவியருக்கான வாலிபால் போட்டி லேடி சிவசாமி பள்ளி அணி வெற்றி
-
காங்., கட்சியினர் ஊசுடு பத்துக்கண்ணில் ‘ராட்டை சத்தியாகிரக’ அறப்போராட்டம்
-
விளம்பரச் செய்தி: உலக சாக்லேட் தின போட்டியில் மணக்குள விநாயகர் கல்லுாரி வெற்றி
-
வீடு புகுந்து 20 சவரன் நகை கொள்ளை கச்சிராயபாளையத்தில் துணிகரம்