தமிழகத்தில் விரைவில் துணை வேந்தர்கள் தேர்வு; அமைச்சர் விஸ்வநாதன் தகவல்
புதுச்சேரி: தமிழக பல்கலைகழகங்களுக்கு விரைவில் துணை வேந்தர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தமிழக உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
புதுச்சேரி காங்., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: புதுச்சேரி காங்., சரிந்து நின்றது கிடையாது. தமிழகத்தில் தேர்தலுக்கு முன் தி.மு.க., கூட்டணியில் இருந்தோம். தேர்தலுக்கு பின் கூட்டணியில் இல்லை. ஒரு போன் அழைப்பு மூலம் ராகுல் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்தார். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என கூறினர்.
திராவிட இயக்கங்களுக்கு கூட்டணி ஆட்சி கிடையாது என்றனர். ஆனால் அவர்களின் அகம்பாவம் அழிந்து போய்விட்டது. தேர்தலுக்கு முன் கூட்டணி போயிருந்தால், 70 எம்.எல்.ஏ.,க்கள் வந்திருப்போம் , துணை முதல்வர் பதவி கிடைத்திருக்கும் என்றெல்லாம் கூறினோம். ஆனால், கட்சியில் உள்ள சில குள்ளநரிகளால் அந்த வாய்ப்பை இழந்தோம்.
புதுச்சேரியில் த.வெ.க.,வுடன் காங்., கட்சி கூட்டணி அமைத்தால், ஆட்சியை பிடித்து விடலாம் என கூறினோம். இங்கேயும் குழிபறிக்கப்பட்டது. குழிபறித்தவர்கள் இன்று வெளியே நிற்கிறார்கள்.
புதுச்சேரி மாநிலம் தன்னாட்சிமிக்கது. வரும் பார்லிமெண்ட் தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். தொடர்ந்து புதுச்சேரியில் ஆட்சியை பிடிப்போம். தமிழகத்தில் லஞ்சம் ஊழல் இல்லை. காமராஜர் பாணியை கடைபிடித்தால், நாற்பது ஆண்டுகள் ஆட்சி நீடிக்கும்.
தமிழகத்தில், நாளந்தா பல்கலைக்கழகம்போல், அனைத்து சிறப்புகள் கொண்ட பல்கலைகழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வருக்கும், கவர்னருக்கும் நல்ல புரிதல் உள்ளது. விரைவில் பல்கலைகழகங்களுக்கு துணை வேந்தர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
'எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய அரசு தயார்!: மழை நிலவரம், விவசாய பணிகள் கண்காணிப்பு
-
18 பெண்களின் உயிரை பலி வாங்கிய இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு 'சீல்'
-
அயோத்தி கோவில் காணிக்கை முறைகேடு காங்கிரஸ் நுாதன போராட்டம்
-
முதல்வரின் தனி செயலாளருக்கு வாழ்த்து
-
இடிந்து விழும் நிலையில் புராதன கோவில் புனரமைக்க இழுத்தடிக்கும் அறநிலையத்துறை
-
நீர்த்தேக்க தொட்டி 'பம்ப் ஆப்பரேட்டர்' பணியிடம்... 1,800 காலி: குடிநீர் வினியோகம், பராமரிப்பு பணிகள் பாதிப்பு