அரசு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்-பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் அண்ணா குபேரன், மாவட்ட செயலாளர் தெய்வானை உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.


இதில், அரசு ஊழியர்களின் பெற்றோர்களையும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும், அனைத்து பயனாளிக-ளுக்கும் கட்டணமில்லா சிகிச்சை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளி அட்-டையை அனைவருக்கும் வழங்க வேண்டும். மேலும், அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கென, தனி பிரிவுகளை அமைக்க வேண்டும்.அனைத்து கலெக்டர் அலுவலகத்திலும், புதிய மருத்துவ காப்-பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தை அமைக்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, தமிழக முதல்-வரின் நேரடி கண்காணிப்பில் செயல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

Advertisement