சென்னியம்மன் கோவிலில் அடிப்படை வசதியின்றி அவதி

அரூர்: அரூர் அடுத்த, டி.அம்மாபேட்டையிலுள்ள சென்னியம்மன் கோவிலில், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையில், தென்-பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் சென்னியம்மன் கோவில் உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய, மூன்று மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு, ஆடி மாதம் பிறந்தவுடன் தினமும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஆடிப்பெருக்கு விழாவில் இக்கோவிலுக்கு, தமிழ-கத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 30,000க்கும் மேற்-பட்ட, பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஆற்றிலுள்ள பாறைகளுக்கு மஞ்சள், குங்குமமிட்டு, பொரி துாவி, பூஜை செய்து வழிபாடு நடத்தி விட்டு, ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இங்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படு-வது தொடர்கதையாக
உள்ளது.
மேலும், இங்கு பலியிடப்படும் ஆடு, கோழிகளின் இறைச்சி கழிவை
அகற்றாமல், துர்நாற்றம் வீசி வருகிறது. கோவில் மூலம்
பல லட்சம் ரூபாய் வருவாய் வந்தபோதிலும், அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பஞ்., நிர்வாகம் சார்பில் எவ்வித வசதிகளும் பக்தர்களுக்கு செய்து தரப்படுவ
தில்லை.
எனவே, நடப்பாண்டிலாவது, சென்னியம்மன் கோவிலுக்கு வரு-பவர்களுக்கு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட, அடிப்படை வசதி-களை செய்து தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Advertisement