சேதமான சாலையை சீரமைக்கக்கோரி லாரிகளை சிறை பிடித்த கிராம மக்கள்

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே, சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி, நேற்று முன்தினம் நள்ளிரவில், 20க்கும் மேற்பட்ட லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்து, மறியல் போராட்டத்தில் ஈடுட்-டனர்.


தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, கோபாலம்பட்டி கிரா-மத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி, பருப்பு, பாமாயில், உள்ளிட்ட பொருட்கள் தர்மபுரியில் இருந்து கொண்டு வந்து சேமித்து வைக்கப்படுகிறது. பின்னர் லாரிகள் மூலம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கிடங்-கிற்கு நார்த்தம்பட்டி பிரிவு சாலையில் இருந்து, பூதனஹள்ளி செல்லும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இதனால், பூதனஹள்ளி மற்றும் கோபாலம்பட்டி-க்கு செல்லும் தார்ச்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. மேலும், பள்ளி, கல்லுாரி வாகனங்கள் சென்று வர முடியாத அள-வுக்கு மாறி உள்ளது. எனவே, கிடங்கிற்கு செல்லும் சேதம-டைந்த தார்ச்சாலையை சீரமைக்கக்கோரி, அப்பகுதி கிராம மக்கள் கிடங்கிற்கு பொருட்களை ஏற்றிவந்த, 20-க்கும் மேற்பட்ட லாரிகளை, நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு சிறைபி-டித்து மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், அதியமான்கோட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கை குறித்து, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, 2 மணி நேர மறியல் கை
விடப்பட்டு, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement