பள்ளி வளாகத்தில் தேங்கிய கழிவுநீர் கால்வாயை சீரமைத்த த.வெ.க.,வினர்

தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பி.பள்ளிப்பட்டி ஊராட்சி, வாசி-கவுண்டனுாரிலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில், 65 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 2 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

இப்பள்ளியிலிருந்து வெளியேறிய கழிவு நீர், கால்வாயில் அடைப்பால், பள்ளி வளாகத்தில் தேங்கி நின்றது. இதனால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இப்பள்ளி மாணவ, மாணவியர், கழிவுநீர் கால்வாய் அடைப்பை அகற்ற சமூக வலைத்தளங்களில், தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, தர்மபுரி, த.வெ.க., மேற்கு மாவட்ட செயலாளர் சிவன், அறிவுறுத்தலின் படி, தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகாந்த், மாவட்ட நிர்வாகி நட-ராஜன் ஆகியோர் தலைமையில், த.வெ.க.,வினர் தங்களின் சொந்த செலவில் பள்ளி வளாகத்தில் தேங்கிய கழிவு நீரை அகற்-றியும், கால்வாயை சீரமைத்தும் நடவடிக்கை மேற்கொண்டனர்.இது குறித்து, மாவட்ட செயலாளர் விஜயகாந்த் கூறுகையில், ''வாசிகவுண்டனுாரில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வச-திகள் செய்து தர மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இம் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய, த.வெ.க., எப்போதும் துணை நிற்கும்,'' என்றார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செல்வம், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் நந்து, ஒன்றிய இணைச்
செயலாளர் அருண், நிர்வாகிகள் சிம்பு, புகழேந்தி, மானே, பிக்சோ, சந்தோஷ், நாகராஜ், அபிமன்யு, முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.

Advertisement