ஒகேனக்கல் காவிரியாற்றில் கழிவு அகற்றும் பணி
பென்னாகரம்: ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்-றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேலும் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், திதி கொடுக்கவும், ஈம சடங்கு காரியங்கள் செய்வ-தற்கும், முதலை பண்ணை மற்றும் நாகர்கோவில் எதிரிலுள்ள காவிரியாற்றுக்கு வருகின்றனர். அங்கு தங்கள் முன்னோர்களுக்கு ஈம சடங்கு காரியங்கள் செய்து விட்டு, தாங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை காவிரியாற்றில் விட்டு செல்கின்றனர். இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீர் குறையும் சமயம் ஆங்காங்கே துணிகளாக காணப்
படுவதுடன் துர்நாற்றம் வீசுவதாக, மாவட்ட கலெக்டரிடம் புகார் சென்றது. இதையடுத்து, கலெக்டர் சரவணன் உத்தரவின்படி, கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட, 40க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், ஒகேனக்கல் நாகர்கோவில் காவிரி ஆறு, முத-லைப்பண்ணை எதிரே உள்ள காவிரியாறு, அருவிக்கு செல்லும் நடைபாதை உள்ளிட்ட இடங்களில் பாறைகளுக்கு நடுவே சிக்கி-யிருந்த துணிகளையும், ஆற்றில் இருந்த துணிகளையும் அகற்-றினர்.
இதை பென்னாகரம் பி.டி.ஓ.,க்கள் ஜோதி கணேசன், கல்பனா ஆகியோர் பார்வையிட்டு, ஆற்றில் பொதுமக்கள் துணிகள் விடு-வதை தடுக்க, பஞ்., செயலாளர் குமரனுக்கு அறிவுறுத்தினர்.
மேலும்
-
'எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய அரசு தயார்!: மழை நிலவரம், விவசாய பணிகள் கண்காணிப்பு
-
18 பெண்களின் உயிரை பலி வாங்கிய இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு 'சீல்'
-
அயோத்தி கோவில் காணிக்கை முறைகேடு காங்கிரஸ் நுாதன போராட்டம்
-
முதல்வரின் தனி செயலாளருக்கு வாழ்த்து
-
இடிந்து விழும் நிலையில் புராதன கோவில் புனரமைக்க இழுத்தடிக்கும் அறநிலையத்துறை
-
நீர்த்தேக்க தொட்டி 'பம்ப் ஆப்பரேட்டர்' பணியிடம்... 1,800 காலி: குடிநீர் வினியோகம், பராமரிப்பு பணிகள் பாதிப்பு