போலி மருத்துவர் கைது

தொப்பூர்: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே கமலநத்தம் கிராமத்தில், போலி மருத்துவர் ஒருவர், நோயாளிகளுக்கு மருத்தும் பார்த்து வருவதாக, தர்மபுரி மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது.

அதன்படி, நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்ட தேசிய நல-வாழ்வு குழும அலுவலர் வினோத்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று ஆய்வு நடத்தினர். இதில், கமலநத்தம் கிராமத்தை சேர்ந்த முருகேசன், 49, என்பவர், எலக்ட்ரோபதி படித்து விட்டு, வீட்டில் வைத்து நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. துறை அலுவலர்கள் புகார் படி, தொப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து போலி மருத்துவர் முருகேசனை கைது செய்தனர். மேலும், வீட்டிலிருந்த, ஊசி, மருந்துகளை பறி-முதல் செய்தனர். கைதான முருகேசன் மீது ஏற்கனவே, அதிய-மான்கோட்டை, தொப்பூர் போலீஸ் ஸ்டேஷன்களில், போலி மருத்துவம் பார்த்து கைதான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement