தரைப்பாலத்தில் ஏறி நின்ற லாரி உயிர் தப்பிய டிரைவர், கிளீனர்

சூளகிரி:கர்நாடகா மாநிலம், பெங்களூருவிலிருந்து, சேலம் நோக்கி நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று சென்றது.

பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சூளகிரி அருகே சின்-னாறு பகுதியில் நள்ளிரவு, 12:30 மணிக்கு சென்றபோது, டிரை-வரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையிலிருந்த தரைப்பா-லத்தின் மீது மோதி, அதன் தடுப்பு சுவர் மீது, லாரியின் டயர் ஏறி நின்றது. லாரியில் இருந்த டிரைவர், கிளீனர் இருவரும் கீழே குதித்து உயிர் தப்பினர், அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்பட-வில்லை. சூளகிரி போலீசில் புகார் ஏதும் செய்யவில்லை. விபத்தில் சிக்கிய லாரியை, அதன் உரிமையாளர்களே நேற்று காலை கிரேன் வைத்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து அச்சா-லையில் போக்குவரத்து சீரானது.

Advertisement