விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அம்பிளிக்கை, ஜூலை 10-

ஒட்டன்சத்திரம் ராயக்கவுண்டன்புதுார் கண்வலி விவசாயி பெரியசாமி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயி குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விவசாயிகள் ஏமாற்றப்படுவதை தவிர்க்க இப்பகுதியில் கண்வலி விதை ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்பிளிக்கையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், மாநில பொருளாளர் பெருமாள், மாவட்ட தலைவர் பெருமாள், செயலாளர் ராமசாமி, பொருளாளர் தயாளன், அகில இந்திய விவசாயிகள் தொழிற்சங்க மாவட்ட தலைவர் வசந்தா மணி, தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement