மட்கும் குப்பை; மட்காத குப்பை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

ஊட்டி: தெரு நாடகம் வாயிலாக, மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை தரம் பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஊட்டி நகராட்சி சார்பில், மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஊட்டி நகரில், தெரு நாடகம் வாயிலாக மக்கள் மத்தியில் இதன் பயன் குறித்து விளக்கப்பட்டது.

அதில், ‘ஊட்டியில் குப்பையை தரம் பிரித்து வழங்குவது நம் ஒவ்வொருவரின் கடைமையாகும். சுகாதாரம் மற்றும் சுற்றுசூழலை பாதுகாக்க முடியும். குப்பைகள் துர்நாற்றம் , நோய் பரவுதலை தடுக்க முடியும். குறிப்பாக, வீடுகளில் சேரும் குப்பைகளை தனித்தனியாக இரண்டு குப்பை தொட்டிகளில் மட்கும் குப்பை, மட்காத குப்பையாக பிரித்து வைக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும். தேவையற்ற பொருட்களை குப்பையில் வீசாமல் மறு சுழற்சிக்கு கொடுக்க வேண்டும்,’ என, அறிவுறுத்தப்பட்டது.

Advertisement