காற்றுடன் பெய்த கனமழை: மரம் விழுந்ததால் பரபரப்பு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் செயல்பாட்டில் இல்லாத பொதுமக்கள் அமரும் அறை மீது மரம் விழுந்தது.
கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகத்துக்கு தினமும் பத்திர பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் அதிகளவு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று காற்றுடன் பலத்த மழை பெய்ததால், பெரிய மரம் ஒன்று அலுவலக வளாகத்தில் இருந்த பயன்பாட்டில் இல்லாத பொதுமக்கள் அமரும் அறை மீது விழுந்தது. அதன் அருகே யாரும் இல்லாததால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. அதன்பின், மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
* வால்பாறையில் காற்றுடன் கனமழை பெய்வதால் பல்வேறு இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள மளுக்கப்பாறை வனத்துறை சோதனை சாவடி அருகே, நேற்று காலை மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், வால்பாறை - சாலக்குடி ரோட்டில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும்
-
எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் முதல் இரவு அறை போல அலங்காரம்; டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட்
-
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
டில்லியில் 3 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் ஒருவர் பலி; பலரை மீட்கும் பணி தீவிரம்
-
சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாகும்; ஜே.டி.வான்ஸ்
-
இந்தியாவின் வளர்ச்சி ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு பலன் அளிக்கிறது; பிரதமர் மோடி
-
ஈரானுக்கு எதிராக மற்றொரு ராணுவத் தாக்குதல்களுக்கு தயார்; அதிபர் டிரம்ப் எச்சரிக்கை