'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சி கொடிசியாவில் இன்று துவக்கம்
கோவை: கொடிசியாவில் 24வது அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சி இன்று துவங்கி, 13ம் தேதி வரை நடக்கிறது.
சக்தி சுகர்ஸ் தலைவர் மாணிக்கம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (பொ) துணைவேந்தர் சுப்ரமணியன், தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் துணைவேந்தர் பெலிக்ஸ், துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
தமிழகம், டில்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளம், மகாராஷ்டிரா உள்பட 16 மாநிலங்களை சேர்ந்த 460க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. 660க்கு மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தாலி, மலேசியா, ஜப்பான், அமெரிக்க நிறுவனத்தினரும் பங்கேற்கின்றனர். நாற்று பண்ணை, கால்நடைகள், காட்சி இயந்திரங்களுக்கான பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement